மஹிந்த தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகவியலாளர்கள், அறை வாங்குவார்கள்; நிமல் தெரிவிப்பு

🕔 July 8, 2015

Nimal sripala - 01முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பாகப் போட்டியிடுவதற்கு – வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று, சில ஊடகங்கள் பொய்யான செய்திகளைப் பரப்பி வருவதாக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பொய்யான செய்திகளைப் பரப்புகின்ற ஊடகவியலாளர்கள் தனது பகுதிக்கு வந்தால், கன்னத்தில் அறை வாங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ  –  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஐ.ம.சு.முன்னணி சார்பாக குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என்றும், நிமல் சிறிபால டி சில்வா திட்டவட்டமாக கூறினார்.

இந்த நிலையில், நாளை அல்லது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை, வேட்பு மனுவில் கையொப்பமிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி: சிலோன் ருடே

Comments

புதிது பேஸ்புக் பக்கம்