கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஹமீட் நியமனம்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அஹமட், இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தினை திருகோணமலையில் அமைந்துள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்து, கிழக்கு மாகண முதலமைச்சர் செயினுலாப்பதீன் நசீர் அஹமட், கே.பீ.எஸ். ஹமீட்டிடம் நேற்று வியாழக்கிழமை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அசீஸ் மற்றும் வீடமைப்பு அதிகாரசபையின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. பாயிஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.