மூதூர் மீனவர், நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்

🕔 February 12, 2017

Dead body - 011– எப்.முபாரக்- 

மூதூர் கடலுக்கு கடந்த வியாழக்கிழமையன்று தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில் காணாமல் போன மீனவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் 01 – பஹ்ரியா நகரைச் சேர்ந்த லத்தீப் பஸ்ரி என்ற 29 வயதுடைய மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரைத் தேடும் பணியில் கிராம மக்களும் கடற்படையினரும் இணைந்து செயற்பட்டிருந்தனர்.

ஜனாஸா நல்லடக்கம் அக்கரைச்சேனை முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments