தாருஸ்ஸலாம் பற்றிய நூலை அச்சிட்டதாகக் கூறப்படுவோர், வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிடுப்பு

🕔 February 11, 2017

Dharussalam -011– அஹமட் –

தாருஸ்ஸலாம் தொடர்பில் வெளியான ‘மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகத்தை அச்சிட்டதாகக் கூறப்படுவோரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்ட கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் – விசேட புலனாய்வு பிரிவினர், சம்பந்தப்பட்ட நபர்களை விடுவிடுத்துள்ளனர்.

‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகத்தை அச்சிட்டதாகக் கூறப்படும் மருதானையிலுள்ள இடத்தில், கொழும்பு குற்றத் தடுப்பு பிவின் விசேட புலனாய்வு பிரிவினர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தேடுதல் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், மேற்படி அச்சகத்தாரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்ட கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் விசேட புலனாய்வு பிரிவினர், அவர்களை விடுவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த நூலானது – புத்தகம் எனும் அடிப்படையில் அச்சிடப்படவில்லை என்றும், அது ஒரு சஞ்சிகையாகவே அச்சிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, மேற்படி புத்தகத்தில் மு.காங்கிரசினையும் இறைவரித் திணைக்களத்தினையும் ஏமாற்றும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, அக் குற்றங்களைப் புரிந்தோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய செயற்பாடுகளில் ஒரு தரப்பினர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்