ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்; கிளங்கள் வைத்தியசாலையில் வரலாற்றுப் பதிவு
🕔 February 9, 2017


– க.கிஷாந்தன் –
டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவர், ஒரே தடவையில், மூன்று ஆண் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஸ்கெலியா – சாமிமலை ஸ்டொக்கம் சின்ன சோலங்கந்த பகுதியை சேர்ந்த, மோகன் புஸ்பலதா என்ற 31 வயதுடைய பெண்ணுக்கே இவ்வாறு மூன்று ஆண் குழந்தைகள் கிடைத்துள்ளன.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர் சீ.யூ. குமாரசிரி இந்த பிரசவத்தின் போது கடமையாற்றினார்.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 03 குழந்தைகள் கிடைத்தமை இதுவே முதல் தடவையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்படி தோட்டத் தொழிலாளியான தாய்க்கு இதற்கு முன்னர் இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையுமாக மூவர் இருப்பதாகவும், இது அவருக்கு மூன்றாவது பிரசவமாக உள்ளதாகவும் மோகன் புஸ்பலதா என்ற தாயின் உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்த தாயும், மூன்று ஆண் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Comments

