ஜனாதிபதியின் மரணத்துக்கு, நாள் குறித்த ஜோதிடர் கைது

🕔 January 31, 2017

Vijitha rohana wijemuni - 097னாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாதம் இறந்து விடுவார் எனத் தெரிவித்து, வீடியோவொன்றினை வெளியிட்ட பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி, இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர்.

இம்மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவார் என, மேற்படி சோதிடர் தெரிவித்திருந்தார்.

ஆயினும், பின்னதாக அவர் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் ஜனாதிபதி இறந்து விடுவார் என ஜோதிடர் விஜேமுனி கூறியிருந்தார்.

கைது செய்யப்பட்ட ஜோதிடர், இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்