அக்கரைப்பற்றைச் சேந்த ஏழு பேர், சட்டத்தரணிகளாகச் சத்தியப் பிரமாணம்

🕔 January 24, 2017
Attorney at law - 01141– அபு அஹமத் – அக்கரைப்பற்று –

க்கரைப்பற்றைச் சேர்ந்த ஏழு பேர் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

இம்மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் உச்ச நீதிமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற இருக்கின்ற சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவான் மற்றும் ஏனைய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையான சட்டத்தரணிகள் ஒரே தடவையில் சத்திப்பிரமாணம் செய்கின்றமை இதுவே முதல் தடவையாகும்.சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள சட்டத்தரணிகள் விபரம்.

1. முஹம்மது மீராசாஹிப் றதீப் அஹமட்
2. ஆதம் லெப்பை ஆஸாத்
3. பதுர்டீன் முஹம்மது சகீக்
4. இஸ்ஸதீன் ரஸா அஹமட்
5. அபுல் காசிம் பாத்திமா சஸ்னா
6. முஹம்மது நபீல் பாத்திமா ரிகாஷா
7. செயிட் அஹமட் பாத்திமா சஸ்னா

Comments