லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம்

🕔 January 17, 2017

lasantha - 0875பிரபல ஊடகவிலயலாளரும், சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியருமான லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு, முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோட்டாபய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என்று, லசந்தவரின் மகள் தெரிவித்துள்ளார்.

அவுஸ்­ரே­லி­யாவிலுள்ள இவர், விசாரணையாளர்களுக்கு வாக்கு மூலம் அளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

கொலை இடம்­பெறுவதற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர், தனது தந்தை தன்­னிடம் தெரி­வித்த விடயங்­களை அவுஸ்­ரே­லி­யாவில் விசாரணையாளர்களிடம் வாக்கு மூலம் வழங்­கி­ய­போது தெரிவித்தார் என, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா கல்­கிசை நீதிவான் நீதி­மன்­றுக்கு நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.

ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்க படு­கொலை வழக்கு, நேற்­றைய தினம் கல்­கிசை பிர­தான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்­னி­லையில் இடம்பெற்றது.

Comments