கொழும்பு பல்கலைக்கழகத்தில், கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் மண்டபம்
🕔 July 6, 2015



கொழும்பு பல்கலைக்கழகத்தில் – கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பெயரில், புதிய கட்டிடமொன்று இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் – கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான புதிய கட்டிடமொன்றுக்கே கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில், கடந்த 10 வருடங்களாக தமிழ் – சிங்கள மாணவா்களுக்கு, தென்னிந்திய இசை, சங்கீத, நாட்டிய விரிவுரையளராக, கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்து.
இந் நிகழ்வில், கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தா் பேராசிரியா் ஆரியரத்தின களுஆராச்சி, பீடாதிபதி சரத் குமார லியனவத்தை மற்றும் மீள்குடியேற்ற, இந்து கலச்சார அமைச்சா் டி.எம். சுவாமிநாதன், இந்திய உயா் ஸ்தானிகராலயத்தின் முதற் செயலாளா் ஸ்சா சிறிவஸ்டவா, காலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் மற்றும் இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவா் சோமரத்தின திசாநாயக்க உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.



Comments

