நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, விமல் வீரவன்சவுக்கு விளக்க மறியல்

🕔 January 10, 2017

Wimal - 08976நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் 40 வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை காரணமாக, 90 மில்லியன் ரூபாய் நஷ்டத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டார்.

மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு வந்து வாக்கு மூலம வழங்கிய வின்னர், விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்