திருகோணமலை மாவட்டத்தில், நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைப்பு

🕔 January 8, 2017

butthah-statue-011திருகோணமலையில் மாவட்டத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நான்கு புத்தர் சிலைகள் இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன.

மொரவெவ சந்தி, புல்மோட்டை 14 ஆம் கட்டை, வெல்கம் விகாரை மற்றும் திரியாய் சந்தி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன.

இந்த செயற்பாட்டினை மேற்கொண்டவர்கள் தொடர்பில், இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என அறியமுடிகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.butthah-statue-033

Comments

புதிது பேஸ்புக் பக்கம்