சுகாதார அமைச்சருக்கு டொக்டர் நக்பர், நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு

🕔 January 6, 2017

nakfer-01– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் உயர்வுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கிய பங்களிப்பினைக் கௌரவிக்கும் வகையில், அவருக்கு நினைவுச் சின்னமொன்றினை, வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் வழங்கி வைத்தார்.

அமைச்சரை அண்மையில் சுகாதார அமைச்சில் வைத்து சந்தித்தபோது, இந்த நினைவுச் சின்னத்தினை டொக்டர் நக்பர் வழங்கினார்.

இதன்போது, வைத்தியசாலையினால் அண்மையில் வெளியிடப்பட்ட ‘ஆரோக்கிய வாழ்வு’ மலரினையும், அமைச்சரிடம் வைத்திய அத்தியட்சகர் நக்பர் கையளித்தார்.

இதன்போது, நிந்தவூரில் அமையப்பெற்றுள்ள ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதுக்குரிய நடவடிக்கைகளுக்கு, சுகாதார அமைச்சர் வழங்கிய ஒத்துழைப்புக்களையும் டொக்டர் நக்பர் நினைவுபடுத்தி நன்றி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்