கற்பிட்டி மீனவர்களுக்கு கிடைத்த 32 கோடி ரூபாய் அம்பர்; சொந்தமாக்குவதில் சட்டச் சிக்கல்

🕔 January 3, 2017

amber-011ற்பிட்டி மீனவர்களுக்கு கடலில் கிடைத்த அம்பர் எனும் அரியவகை விலை யுயர்ந்த பொருளை அரசுடைமையாக்குமாறு, கடற்படையினர் நீதிமன்றத்தை கோரியதுடன் குறித்த மீனவர்களையும் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இந்த மீனவர்கள் அண்மையில் கடலுக்கு சென்று திரும்பியபோது கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு பொருளை கரைக்கு கொண்டு வந்தபோது அது திமிங்கிலத்தின் உடலிலிருந்து வெளியேற்றப்படும் அம்பர் என்றழைக்கப்படும் ஒருவகை பொருள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது திமிங்கிலங்களின் உடலிலிருந்து வாய் வழியாக வெளியேற்றப்படும் துர்நாற்றம் மிக்கதொரு விலைமதிப்பான பொருள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு கரைக்கு கொண்டுவந்த சுமார் 32 கிலோ கிராம் நிறையுடைய அம்பரை மீனவர்கள் எடுத்து செல்ல முற்பட்டபோது கற்பிட்டி கடற்படையினர் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

அதன்பின்னர் அம்பர் சகிதம் குறித்த மீனவர்களும் பொலிஸாரின் மூலமாக புத்தளம் நீதிவான் மன்றில் ஆஜர்செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அரசுக்கு சொந்தமாக கூடிய இப் பொருளை உரிமை கோரியமைக்காகவே குறித்த மீனவர்களை தாம் கைது செய்ததாகவும், அவர்களிடமிருந்த கைப்பற்றப்பட்ட இந்தப் பொருளை அரசுடமையாக் வேண்டும் என கடற்படையினர் நீதிமன்றை கோரியிருந்தனர்.

எனினும் மீனவர்களினால் கடலிலிருந்து எடுக்கப்பபட்ட பொருள் அரசுடைமையாகாது எனவும் அதனைக் கண்டுபிடித்தவர்களையே அப் பொருள் சாரும் எனவும் மீனவர்கள் தொடர்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி வாதிட்டிருந்தார்.

இவ் வழக்கினை பலமுறை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம், குறித்த எம்பரை ஆராய்சிக்காக நாரா நிறுவனத்திடம் ஒப்படைக் குமாறு உத்தரவிட்டது.

மீனவர்களினால் கண்டெடுக்கப்பட்ட அம்பரின் ஒரு கிலோகிராமின் பெறுமதி ஒரு கோடியாகும் இதன்காரணமாகவே இப் பிரச்சினை நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அம்பர் என்றால் என்ன? வாருங்கள் தெரிந்து கொள்வோம்: அம்பர்: கோடி ரூபாய் பெறுமதியான திமிங்கிலத்தின் வாந்தி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்