மின்சாரம் தாக்கி, 04 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

🕔 December 22, 2016

death-011– க. கிஷாந்தன் –

ப்புதளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஹிய உடவேரியா தோட்டத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

உடவேரியா தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் சுப்ரமணியம் எனும் 32 வயது மதிக்கத்தக்க 04 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

விறகு சேகரிப்பதற்கென சென்றவர் அங்கு மரத்தின் கிளையொன்றினை வெட்டி இழுக்க முயற்சித்த போது, அந்த மரக்கிளையானது மின்சாரக்கம்பியில் பட்டதனால், உடலில் அதி சக்தி வாய்ந்த மின்சாரம் தாக்கிய நிலையில், குறித்த நபர் உயிரிழந்ததாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தொழிலாளியின் சடலம் பிரேத பிரசோதனைக்காக பொரலாந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹப்புதளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்