சல்மான் ராஜிநாமா; நாடாளுமன்ற உறுப்பினராகிறார் ஹசனலி

🕔 December 16, 2016

salman-011– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் சற்று முன்னர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமாச் செய்துள்ளார்.

மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் பொருட்டே, சல்மான் ராஜிநாமாச் செய்துள்ளார் எனத் தெரிய வருகிறது.

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கம் – செயலாளர் நாயகம் ஹசனலிக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது, ஹசனலிக்கு உடனடியாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், ஒரு மாத காலத்துக்குள் கட்சியின் பேராளர் மாநாட்டினைக் கூட்டி, அதன் மூலம் – முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியினையும் வழங்குவதாக ஹக்கீம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மு.காங்கிரசின் செயலாளர் தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வுகாணும் பொருட்டு, ஹசனலியுடன் இவ்வாறானதொரு சமரசத்துக்கு மு.கா. தலைவர் வந்துள்ளார்.

தொடர்பான செய்தி: ஹக்கீம் – ஹசனலி சந்திப்பு; உடனடியாக எம்.பி, பின்னர் செயலாளர் பதவியினை வழங்குவதாக வாக்குறுதி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்