வனப் பகுதியில் காணாமல் போன ஐவர், 03 நாட்களின் பின்னர் மீட்பு

🕔 December 14, 2016

maskeliya-011– க. கிஷாந்தன் –

ஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற நிலையில் காணாமற் போன ஐவரும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லக்ஷபான வாழமலை தோட்ட முகாமையாளரின் உறவினர்கள் நால்வரும், அவர்களுக்கு வழிகாட்டியாகச் சென்ற லக்ஷபான எமில்டன் தோட்ட தொழிலாளியுமாக ஐவர், எமில்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இதனால், அவர்களைத் தேடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர், ராணுவம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து கடந்த 03 நாட்களாக தேடி வநதனர்.

இந்நிலையில் எமில்டன் பாதுகாப்பு வனப்பகுதியான ரதபொட் எனும் இடத்தில் நேற்றிரவு 10 மணியளவில் இவர்களை அதிரடிப்படையினர் கண்டுபிடித்து, இன்று மதியம் மீட்டுக் கொண்டுவந்தனர்.

மேற்படி நபர் ஐவரும் கடந்த திங்கட்கிழமையன்று மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அன்று இரவு முதல் இவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக இவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

எது எவ்வாறு இருப்பினும் ஐவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பாதுகாப்புத் தரப்பினர் கூறினர்.

வழிகாட்டி – கிருஷ்ணசாமி (வயது 56), தோட்ட முகாமையாளர்களின் உறவினர்களான காவிந்த திசேரா (வயது – 22), மிகார விக்கிரமசிங்க, (வயது – 31) பியூமி கல்பனிவன்ச (வயது – 23) மற்றும் சமித்தா விக்கிரமசிங்க (வயது – 55) ஆகியோரே இவ்வாறு காணாமல் போய் மீட்கப்பட்டனர்.maskeliya-033 maskeliya-022

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்