ஜனாதிபதி செயலகத்துக்கு 1200 வாகனங்கள், இரண்டு மாத உணவுக்கான செலவு 15 கோடி: மஹிந்த காலத்துக் கணக்கு

🕔 November 20, 2016

presidential-secretariat-10ஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, ஜனாதிபதி செயலகத்துக்கென 1200 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2014 ஆம் ஆண்டு நொவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு மட்டும் ஜனாதிபதி செயலக உணவுக்காக 150 மில்லியன் ரூபாய் (15 கோடி) செலவிடப்பட்டிருந்ததாகவும் அவர் இதன்போது கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையானோர் பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, இவ்வாறு மிக அதிகமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கான காரணங்களின் பின்னணியினை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்