தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய (ஹேக் செய்த) மாணவனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை சந்தித்தார்.
குறித்த மாணவனை, அவரின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார்.
17 வயதுடைய கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி மாணவன், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவினார் எனும் குற்றச்சாட்டில், கடந்த ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் இவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, இவரை குடும்பத்தினருடன் செல்ல அனுமதித்த நீதவான், மூன்று வருடங்களுக்கு சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் – குறித்த மாணவனை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையிலேயே, மேற்படி மாணவனை ஜனாதிபதி சந்தித்து உரையாடியுள்ளார்.




