டான் பிரியசாத்தை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 November 15, 2016

dan-priyasad-09முஸ்லிம்களை மோசமாகப் பேசி வீடியோக்களை வெளியிட்டவரும், முஸ்லிம் மக்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருமான டான் பிரியசாத் என்பவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு – கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபருக்கு எதிராக கோட்டே பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவும், பொலிஸ் மா அதிபரின் அறிவுத்தலுக்கிணங்கவும், டான் பிரியசாத் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

மேற்படி நபர் – இன நல்லுறவினை சீர்குலைக்கும் வகையிலும், ஏனைய சமூகத்தினரின் மத உணர்வினைப் புண்படுத்தும் வகையிலும் தனது பேஸ்புக் பக்கத்தினூடாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

மேலும், கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்னால் நின்று கொண்டு, முஸ்லிம்களை கொல்லப் போவதாகவும் கடந்த வாரம் இவர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

டான் பிரியசாத் கைது செய்யப்பட்ட போது, எடுக்கப்பட்ட வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்