முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கு எதிராக, சம்மாந்துறையில் கண்டனப் பேரணி

🕔 November 11, 2016

protest-06-1– எம்.வை. அமீர் –

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவரவுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது.

இந்தக் கண்டனப் பேரணினை, இலங்கை தௌஹீத் ஜாமாஅத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பெறுவதற்காக முஸ்லிம் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றத்தை, தாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்பதை வலியுறுத்தி இந்தக் கண்டனப் பேரணி இடம்பெற்றது.

ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் பங்குகொண்ட இந்தப் பேரணியில், முஸ்லிம் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராக, பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளை, கலந்துகோண்டோர் ஏந்தியிருந்தனர்.

மேலும், முஸ்லிம் சட்டத்தில் கைவைத்தால், மஹிந்தவை வீழ்த்தியது போன்று மைத்திரி ஆட்சிக்கும் முடிவு கட்டுவோம் என்று,பேரணியில் கலந்துகொண்டோர் கோசங்களை எழுப்பினர்.protest-08-2 protest-08-1 protest-06-2

Comments

புதிது பேஸ்புக் பக்கம்