வரவு – செலவுத் திட்டம்: ஆசிரியர்களுக்கு டெப் (TAB), விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு நாளாந்த கொடுப்பனவு அதிகரிப்பு

🕔 November 10, 2016

budget-2017-01ரவு செலவு திட்ட உரை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை அவர் அறிவித்து வருகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியேரின் தமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

அந்தவகையில்,

  • கோழி இறைச்சிக்கு அதிகூடிய சில்லறை விலை கிலோகிராம் ஒன்றுக்கு 420 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விவசாயம், மரக்கறி மற்றும் பழவகை உற்பத்திக்கு 100க்கு 50 வீத கடன் வட்டி நிவாரணம் வழங்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தமது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார். இதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
  • 175,000 உயர்தர மாணவர்கள் மற்றும் 28,000 ஆசிரியர்களுக்கும் இலவச டெப் கணிணி (TAB) வழங்குவதுடன், இதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • தெரிவு செய்யப்பட்ட 175,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் உயர்தரமான வகுப்பறை வசதிகளை வழங்குவதற்காக 6,500 மில்லியன் நிதி ஒதுக்குவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • விசேட தேவையுடைய சிறார்களுக்கான நாளாந்த கொடுப்பனவு 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
  • பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி கொடுப்பனவாக 2 லட்சம் ரூபா வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்