ஐ.தே.கட்சியின் களனித் தொகுதி பிரதம அமைப்பாளராக, சரத் பொன்சேகா நியமனம்

🕔 November 2, 2016

sarath-fonseka-087.தே.கட்சியின் களனித் தொகுதி பிரதம அமைப்பாளராக பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.தே.கட்சியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இதற்கான நியமனக் கடிதத்தை சரத் பொன்சேகாவுக்கு, கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் ஐ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் மற்றும் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஹொங்கொங்கில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, இன்றைய தினம் பிரதமர் நாட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்னதாக இந்த நியமனம் வழங்கப்பட்டது.

Comments