பிரதமருக்கு எதிராக விசாரணை; அப்படி எதுவும் பேசப்படவில்லை: அமைச்சர் தயாசிறி தெரிவிப்பு

🕔 November 2, 2016

Dhayasri jayasegara - 865லங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக விசாரணை நடத்துவது குறித்து, சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் பேசப்படவில்லை என, அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திரம் சம்பந்தமான ‘கோப்’ அறிக்கை குறித்து கலந்துரையாடும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, பிரதமருக்கு எதிரான விசாரணை சம்பந்தமாக எதுவும் பேசப்படவில்லை என கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மோசடியான அதிகாரிகளை பாதுகாக்கும் தேவை பிரதமருக்கு இல்லை எனவும், அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

‘கோப்’ அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக, அதனை சட்டமா அதிபருக்கு துரிதமாக அனுப்பியதன் மூலம் இது தெளிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான ‘கோப்’ அறிக்கை குறித்து ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை வழங்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.

இந்த குழுவில் அமைச்சர்கள் ஜோன் செனவிரட்ன, பைசர் முஸ்தபா, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, லசந்த அழகியவண்ண ஆகியோருடன் தானும் அங்கம் வகிப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்