முன்னாள் ராணுவ வீரர்கள், வீதியில் இறங்கிப் பேராட்டம்; சந்தித்துச் சென்றார், உதய கம்மன்பில
🕔 November 1, 2016


யுத்தத்தில் அங்கவீனமடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் பாரிய கவன ஈர்ப்பு நடவடிக்கை ஒன்றினை, இன்று செவ்வாய்கிழமையும் முன்னெடுத்துள்ளார்கள்.
கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
இந்த நடவடிக்கை, இன்று காலையில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை தொடர்கின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தேச ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில், படைவீரர்களின் கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் இது வரையில் நிறைவேற்றவில்லை என தெரிவித்து, முன்னாள் ராணுவ வீரர்கள் தமது நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதே காரணங்களை முன்வைத்து நேற்றைய தினமும் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்துக்கு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வருகைத்தந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் ராணுவ வீரர்களிடம் கலந்துரையாடி விட்டு சென்றுள்ளார்.
இந் நடவடிக்கையில் ஏராளமான முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், நடு வீதியில் அமர்ந்து கொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றார்கள்.

Comments

