தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’க் கதை: வீடியோ அம்பலம்

🕔 October 30, 2016

thavam-097– றிசாத் ஏ காதர் –

கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தை ‘வேசையின் வெற்றிலைப் பெட்டி’ என்று, கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில், முதலமைச்சருடன் தவம் இருக்கும் போதே, இவ்வாறான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார் எனக் கூறப்படுகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சருடன் தவம் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு சபையின் மற்றொரு மு.கா. உறுப்பினர் ஆர்.எம். அன்வர், வந்ததாகவும், அது உறுப்பினர் தவத்துக்கு பிடிக்கவில்லை என்பதனாலேயே, தவம் இவ்வாறு பேசியதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், தூரப் பிரதேசங்களில் கடமையாற்றும் பெண் ஆசிரியர்கள் சிலரை அழைத்துக் கொண்டு, அவர்களின் இடமாற்றம் தொடர்பில் பேசுவதற்காகவே, அன்வர் அங்கு வந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

எது எப்படியிருந்தாலும், மாகாணசபை உறுப்பினர் தவம் – அவ்வாறு பேசியிருந்தால் அது மிகவும் தவறாகும் என ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

ஆயினும், தான் – அவ்வாறு பேசவில்லை என்று தவம் தெரிவித்ததாக, சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவம், அவ்வாறான வார்த்தைகளைப் பிரயோகித்தமைக்கு ஆதாரமாக, ஒரு  வீடியோ ‘புதிது’ செய்தித் தளத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த வீடியோ – எடிட் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்டுள்ளது. அதனை அனுப்பியவர்களே அதை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவம், பதிலளிக்க விரும்பினால், அதன் தரம் கண்டு வெளியிட ‘புதிது’ செய்தித்தளம் தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

‘வெற்றிலைப் பெட்டி’க் கதை வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்