மக்கா மீதான ஏவுகணைத் தாகுதலும், பின்னணியும்

🕔 October 29, 2016

saudi-arabia-099ஊதி அரேபியாவின் மக்கா நகரை நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலொன்றினை, சஊதி அரேபிய படைகள் முறியடித்திருந்தமை தெரிந்ததே.

எமனிலுல்ள ஹவ்தி தீவிரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த ஏவுகணையை ஆகாயத்தில் வைத்து இடைமறித்துத் தாக்கியழித்துள்ளது சஊதி அரேபிய வான்படை.

இந்த நிலையில், முஸ்லிம்களின் புனித கஃபாவை நோக்கி தாக்குதல் மேற்கொள்ளத் துணிந்த ஹவ்தி தீவிரவாதிகளை அழிக்காமல் விடப் போவதில்லை என்று, சஊதி அரேபியா அறிவித்துள்ளது.

எமன் நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக, ஹவ்தி தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். ஹவ்தி தீவிரவாதிகளுக்கு, ஈரான் பின்னணியிலிருந்து உதவி வருகின்றதாகக் கூறப்பபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹவ்தி தீவிரவாதிகளுக்கு எதிராக எமன் நாடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு, சஊதி அரேபியா உதவி வருகிறது. இதனால், சஊதி மீது ஆத்திரமடைந்த நிலையிலேயே, ஹவ்தி தீவிரவாதிகள் மக்காவிலுள்ள கஃப்துல்லாவை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

மக்கா நகர் மீது ஏவப்பட்ட ஏவுகணையானது Burkan – 01 எனும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையாகும்.

எமன் நாட்டிலுள்ள Saada மாகாணத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் குறித்து சஊதி அரேபியாவுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹவ்தி தீவிரவாதிகள் ஏவியை மேற்படி ஏவுகணையினை, மக்காவிலிருந்து 65 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் வைத்தே, சஊதி அரேபியா தாக்கியழித்தமை குறிப்பிடத்தக்கது.

ஏவுகணையினைத் தாக்கியழிக்கும் வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்