குளவி தாக்கி, சாதிகீன் அப்துல் கபூர் மரணம்

🕔 October 27, 2016

Wasp - 01– எப். முபாரக் –

திருகோணமலை உப்புவௌி பொலிஸ் பிரிவுற்குற்பட்ட  காட்டுப்பகுதிக்குள் விறகு எடுக்கச்சென்ற நபரொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நபரொருவர் இன்று வியாழக்கிழம உயிரிழந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை குளவி கொட்டிய நிலையில்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலே, இன்று அதிகாலை  இவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை – மிகிந்தபுரம் 02ம் ஒழுங்கையில் வசித்து வந்த சாதிகீன் அப்துல் கபூர் (69 வயது) என தெரிய வருகிறது.

குறித்த நபரின் சடலம் வைத்தியசாலை பிரேத அறையயில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை உப்புவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்