சர்வதேச தரப்படுத்தலில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்னேற்றம்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

🕔 October 24, 2016

naajim-vc-07
– பி. முஹாஜிரீன் –

ர்வதேச பல்கலைக்கழகத் தரப்படுத்தலில் – முன்னேற்றமடைந்துவரும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் திகழ்கிறது என, அந்தப் பல்கலைக்ககழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21 வருட பூர்த்தி விழாவும், பல்கலைக்கழக ஸ்தாபகர் தின வைபமும் இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.

மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே உபவேந்தர் நாஜிம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்ளூ

‘அரசியல் சாணக்கியத்துடன் தூரநோக்கோடு மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் முன்னெடுத்த அரசியல் நகர்வுகளின் பயனாகக் கிடைத்த தென்கிழக்குப் பல்கலைக்கழகம், சர்வதேச அளவில் உயர்ந்து காணப்படுவதையிட்டு மகிழ்சி அடைகின்றேன்.

நாட்டின் கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, மூவின சமூகங்களும் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம், இன்று அஷ்ரப்பின் கனவை நனவாக்கி வருகிறது. மேலும் நாட்டின் பொருளாதார, சமூக, கலாசார வளர்ச்சிக்கும் இந்தப் பல்கலைக்கழகம் பங்களிப்பை வழங்கி வருகின்றது.

இப் பல்கலைக்கழகத்தை மேலும் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு சென்று, மர்ஹும் அஷ்ரபின் இலக்கை நாம் எல்லோரும் அடைவதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அஷ்ரபின் மூச்சும் பேச்சும் அவரது உணர்வுகளும் முஸ்லிம் சமூகமாகவே இருந்து வந்தது. அவர் எப்போதும் லட்சிய நோக்குடைய தலைவராகவே திகழ்ந்தார். அவருடைய அரசியல் கோட்பாடுகள், கொள்கைகள், இலக்குகளை வெற்றி பெறச் செய்வது, எமக்கிருக்கும் பாரிய சவாலாகும். அதற்காக அவரின் தடத்தில் பயணிப்பதே அவருக்கு நாம் செய்யும் உயர்ந்த கௌரவமாக இருக்கும்’ என்றார்.naajim-vc-04

Comments

புதிது பேஸ்புக் பக்கம்