அனுமதியின்றி மதுபானம் கொண்டு சென்றவர்கள் யாழில் கைது

🕔 June 26, 2015
Liquor - 01– பாறுக் ஷிஹான் –

யாழ். நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக – மதுபானம் ஏற்றிவந்த இருவர், இன்று வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

391 சாராய போத்தல்களையும், அவற்றினை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்திய வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றினர்.

ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பெறாமல், யாழ். குடாநாட்டுக்குள் அதிகளவு மதுபானம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் – இன்றைய தினம், யாழ். பிராந்திய பொலிஸ் அதிகாரியின் பணிப்பின் பேரில், நடைபெற்ற விஷேட சோதனையின் போதே, குறித்த மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்படன.

சட்டவிரோதமாக, மதுபானத்தினை ஏற்றி வந்தவர்கள் – சுன்னாகம் பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.Liquor - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்