தில்ருக்‌ஷி டயஸ்: பழைய பதவியை புதிதாக ஏற்றார்

🕔 October 20, 2016
dilrukshi-dias-wickramasinghe-0988ஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியினை ராஜிநாமா செய்த தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க, மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில், சர்ச்சைக்குரிய கருத்தொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமையினை அடுத்து, அதன் பணிப்பாளராகப் பதவி வகித்த தில்ருக்ஷி, தனது பதவியை இரண்டு நாட்களுக்கு முன்னர் ராஜிநாமாச் செய்திருந்தார்.
இந்தநிலையிலேயே அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடந்த பெப்ரவரி மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர், தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க – மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்