திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூதூர் இளைஞர்கள் படுகாயம்

🕔 October 17, 2016

bike-accident-0989
– எப். முபாரக் –

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கைப் பாலத்தருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.

இவர்களில் ஒருவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றையவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற இவ்விபத்தில் மூதூர் ஆனைச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே  படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்