இந்தியாவில் நடைபெறும் ஆயுர்வேத பயிற்சி நெறியில், டொக்டர் நக்பர் கலந்து கொள்கிறார்

🕔 October 15, 2016

Dr. Nakfer - 01– முன்ஸிப் –

யுர்வேத ஹிஜாமா வெளிக்கள பயிற்சி நெறியில் கலந்து கொள்ளும் பொருட்டு, அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரும், நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருமான டொக்டர் கே.எல்.எம். நக்பர் – நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகிறார்.

இந்தியாவில் நடைபெறும் மேற்படி பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 15 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர், அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களுர் ஆகிய நகரங்களிலுள்ள யூனானி மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில், இந்த பயிற்சி நெறி இடம்பெறவுள்ளது.

டொக்டர் கே.எல்.எம். நக்பர் – சீனாவில் நடைபெற்ற ஒரு மாத கால பயிற்சிப் பட்டறையொன்றிலும், அண்மையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்