மஹிந்தவின் புதிய கட்சிக்கான பெயர்களை சிபாரிசு செய்து, 13 ஆயிரம் ஈமெயில்கள்

🕔 October 14, 2016

mahinda-097ஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான பெயர்களை சிபாரிசு செய்து, 13 ஆயிரம் ஈமெயில்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றிணைந்த எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சிக்கு பெயர்களையும், கட்சிக்கான யாப்பினையும் சிபாரிசு செய்யுமாறு ஒன்றிணைந்த எதிரணியினரின் அலுவலகம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிணங்கவே, மேற்படி 13 ஆயிரம் ஈமெயில்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

எவ்வாறாயினும், இம்மாதம் 13 ஆம் திகதி, அதாவது – நேற்றைய தினத்துடன், சிபாரிசுகளை அனுப்புவதற்கான இறுதித் திகதி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியினரின் புதிய கட்சிக்கான யாப்பினைத் தயார் செய்யும் பொருட்டு, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

ஏழு பேரைக் கொண்ட இந்தக் குழுவினர் இம்மாதம் 30 ஆம் திகதிக்குள், யாப்புத் தயாரிப்புப் பணியினை நிறைவு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்படி 07 பேரைக் கொண்ட யாப்புத் தயாரிப்புக் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணியொருவர், சிரேஷ்ட சட்டத்தரணிகள் இருவர் மற்றும் பல்கலைக்கழ விரிவுரையாளர்கள் இருவர் அடங்குகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்