ஜனாதிபதியும், பிரதமரும் நேற்றிரவு சந்திப்பு; விமர்சனம் மற்றும் ஊகங்கள் குறித்து பேச்சு

🕔 October 14, 2016

maithiriranil-976னாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று வியாழக்கிழமை இரவு – சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பிரதமருடன் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிக் குற்றப் புலாய்வுப் பிரிவு தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த விமர்சனங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக தெரியவருகிறது.

மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளாக பரவிவரும் ஊகங்கள் குறித்தும், இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments