மஹிந்த, கோட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பேராசிரியர் பட்டங்களை மீளப் பெறுமாறு கோரிக்கை

🕔 October 13, 2016

mahindagotta-0873முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு கொழும்பு பல்லைக்கழகம் வழங்கிய பேராசிரியர் பட்டங்களை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொது மக்கள் கொள்கை மற்றும் அரசியல் பிரிவின் முன்னாள் பேராசிரியர் லக்சிறி பெர்ணான்டோ, அந்தப் பல்கலைக்கழகத்துக்கு மேற்படி கோரிக்கையை விடுத்து கடிதமொன்றை எழுதியுள்ளார்.

மஹிந்த மற்றும் கோட்டா ஆகியோருக்கு பேராசிரியர் பட்டம் வழங்குவதற்காக தாமும் பரிந்துரைத்திருந்ததாக குறிப்பிட்ட பேராசிரியர் லக்சிறி, பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டதன் பின்னர் மஹிந்தவின் செயற்பாடுகளும் கோட்டாவின் செயற்பாடுகளும் ஜனநாயக ரீதியில் காணப்படவில்லையென தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் பதவிக்காக திட்டமிட்டதன் ஊடாக – பேராசிரியர் பட்டத்தின் கௌரவம் மீறப்பட்டுள்ளதாகவும், இவற்றை கருத்திற்கொண்டு, மஹிந்தவுக்கும் கோட்டாவுக்கும் வழங்கப்பட்டுள்ள கௌரவ பட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகம் மீளப் பெறவேண்டுமென பேராசிரியர் லக்சிறி வலியுறுத்தியுள்ளார்.

Comments