இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர், லண்டனில் மரணம்

🕔 October 12, 2016

athil-01முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் புதல்வர் ஆதில் பாக்கீர் மாக்கார் லண்டனில் மரணமானார்.

உயர் கல்விக்காக புலமைப்பரிசில் பெற்று சில வாரங்களுக்கு முன்னரே அவர் லண்டன் சென்றிருந்த நிலையில், காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணித்துள்ளார்.

இலங்கை சட்டக் கல்லூரியில் தனது படிப்பை நிறைவுசெய்த ஆத்தில், மேற்படிப்பைத் தொடரும் பொருட்டு, Chevening புலமைப் பரிசில் பெற்று பிரித்தானியாவுக்குச் சென்றிருந்தார்.

அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரத்துக்கான லண்டன் கல்லூரியில், ஒப்பீட்டு அரசியல் துறையில் தனது மேற்படிப்பை இவர் தொடர்ந்தார்.

Chevening புலமைப் பரிசிலானது, பிரித்தானிய அரசாங்கத்தினால் உலகளாவிய ரீதியில் சிறந்த தலைமைகளை உருவாக்கும் நோக்கில் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

Comments