பாலத்தில் மோதுண்டு ஆற்றில் விழுந்தது, திருகோணமலை சென்ற பெற்றோல் பவுசர்
🕔 October 10, 2016
– எப். முபாரக் –
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு பெற்றோல் ஏற்றுவதற்காகச் சென்ற பவுசர், இன்று திங்கட்கிழமை அலுத் ஓயா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதன்போது குறித்த பவுசரின் சாரதியும், அதன் உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
அலுத் ஓயா பாலத்தில் மோதுண்ட நிலையிலேயே, மேற்படி பவுசர் ஆற்றில் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமும் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.