மயானங்களுக்கு அருகில், பேச்சுவார்த்தை நடத்தினோம்: மஹிந்தவின் கண்களில் மண் தூவிய கதை

🕔 September 25, 2016

Chathura senaradna - 092னாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராகக் கொண்டு வரும் பொருட்டு, வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான போராடத்தினை தான் எதிர்கொண்டதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வாகனங்களை மயானங்களுக்கு அருகில் நிறுத்தி விட்டு, முக்கியஸ்தர்களுடனான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி நடந்த அரசியல் புரட்சிக்கான முக்கிய சந்திப்புகளை தானே ஒழுங்கு செய்திருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஜனவரி 08 புரட்சிக்கு தற்பொழுது பல உரிமையாளர்கள் உள்ளனர். எனினும் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான போராட்டத்திற்கு மத்தியில் முக்கியமான சந்திப்புகளை ஒழுங்கு செய்தேன்.

அத்துரலியே ரத்ன தேரர் அதற்கு உதவினார். பொது வேட்பாளராக போட்டியிடுமாறு ராஜித சேனாரத்னதான் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரினார்.

இதன் பின்னர், மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நானே இரகசியமான முறையில் ஒழுங்கு செய்தேன். சில தலைவர்களை எனது வாகனத்தில் அழைத்துச் சென்றேன்.

வாகனங்களை மயானங்களுக்கு அருகில் நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்