மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட, சகோதரிகள் இருவரின் சத்தியாக்கிரம் தொடர்கிறது
🕔 September 21, 2016


– க. கிஷாந்தன் –
மீரியபெத்த மண் சரிவில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரின் சத்தியாகிரகப் போராட்டம், இரண்டவாது நாடாகளும் தொடர்கிறது.
மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரில், ஒருவருக்கு மாத்திரமே அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும் வீடு வழங்கப்படும் என்று, பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
ஆயினும், தங்கள் இருவருக்கும் வீடுகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, மேற்படி சகோதரிகள் இருவரும், பண்டாரவளை நகர பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள சுற்று வட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
மீரியபெத்த தோட்டத்தில் இரு குடும்பங்களாக இரு வீடுகளில் வாழ்ந்து வந்த இவர்கள், மண்சரிவில் சிக்குண்டு தமது உறவுகளையும் பறிகொடுத்ததோடு, உடமைகளையும் இழந்தனர்.
இந்த நிலையில், தற்போது இவர்கள் முகாமில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் வரை, தமது போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று, மேற்படி சகோதரிகள் இருவரும் தெரிவித்தனர்.

Comments

