05 லட்சம் ரூபாய் பெறுமதியான மரக்கறியுடன், லொறி கவிழ்ந்து விபத்து
🕔 September 20, 2016


– க. கிஷாந்தன் –
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு – மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது.
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்திருந்தனர். ஆயினும், அவர்கள் ஆபத்தின்றி உயிர் தப்பியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான லொறியிலிருந்த 05 லட்சம் ரூபாய் பெறுமதியான மரக்கறி வகைகளை, பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறில் ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆயினும், சில மரக்கறி வகைகள் சேதமாகியுள்ளன.

Comments

