கேரளக் கஞ்சா வைத்திருந்த, கிளிக்குஞ்சு மலை நபருக்கு விளக்க மறியல்

🕔 September 20, 2016

Prison - 0978– எப். முபாரக் –          

திருகோணமலை – கன்னியா  பிரதேசத்தில் 380 கிராம்  கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை  நீதிமன்ற நீதிவான் எல்.எச். விஸ்வானந்த பெர்ணாண்டோ இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.

கன்னியா, கிளிக்குஞ்சு மலைப் பகுதியைச்  சேர்ந்த 37  வயதுடைய நபர் ஒருவரையே, இவ்வாறு விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

குறித்த சந்தேக நபர், வீட்டில் கேரளா  கஞ்சா வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபரின்  வீட்டினை சோதனை மேற்கொண்டபோதே 380 கிராம் கேரளா கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சந்தேக நபரை நேற்ற திங்கட்கிழமை மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments