அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதியில், நீண்ட நாட்களின் பின்னர் மழை

🕔 September 18, 2016

Raining - 01ம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

மிக நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் மழை பொழியத் தொடங்கியுள்ளது.

நீண்ட காலமாக கடும் வெப்பம் நிலவிய நிலையில், தற்போது மழை பெய்ய ஆரம்பித்ததும் குளிர்ந்த காலநிலை ஏற்பட்டுள்ளது.

வெப்பமான காலநிலை நிலவியமை காரணமாக இப்பகுதியில் சிறுவர் மற்றும் முதியோர் பல்வேறு நோய்த் தாக்கங்களை எதிர்கொண்டு வருந்தனர்.

மாவட்டத்தில் நெல் அறுவடையும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதைய மழை, மக்களுக்கு மிகவும் தேவையானதாக உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்