கல்ஹின்னை பள்ளிவாசல் மீது, இனவாதத் தாக்குதல்

🕔 September 16, 2016

galhinna-011ண்டி மாவட்டம் கல்ஹின்னை – பெபிலிகொல்ல பள்ளிவாசல் மீது, நேற்று வியாழக்கிழமை இரவு, கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, வீடுகள் மீதும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

கல்ஹின்னை பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, போதையில் வந்த சிங்கள இளைஞர்கள், முஸ்லிம் இளைஞர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு கல்ஹின்னை – பெபிலிகொல்ல பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் பாதுகாப்புத் தரப்பினருடன் பேசியதோடு, சம்பவ இடத்துக்கும் விஜயம் செய்தனர்.

இந்த சம்பவம் காரணமாக, கல்ஹின்னை பிரதேசத்தில் நேற்றிரவு அச்சமானதொரு சூழ்நிலை காணப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்