முச்சக்கர வண்டி, கடற்படை பஸ் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்

🕔 September 9, 2016

accident-0987– க. கிஷாந்தன் –

முச்சக்கர வண்டியொன்றும் கடற்படையினருக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வெலிமடை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிமடை – பண்டாரவளை பிரதான வீதியில் யல்பத்வெல எனுமிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது.

இதன் போது முச்சக்கர வண்டியில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் பயனித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்