துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம்

🕔 September 9, 2016

duminda-silva-01
மு
ன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனா­தி­ப­ தியின் தொழிற்சங்க ஆலோ­ச­க­ரு­மான பாரத ல­க் ஷ்மன் பிரே­ம ச்சந்­திர உள்­ளிட்ட நால்­வரை கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 8ஆம் திக­தி­யன்று பிற்­பகல் வேளையில் அங்­கொடை, ஹிம்புட்­டான ஒழுங்­கையில் வைத்து சுட்டுக் கொலை செய்த குற்­றச்­சாட்டில் முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பினர் துமிந்த சில்வா உள்­ளிட்ட ஐவ­ருக்கு கொழும்பு மேல் நீதி­மன்றம் மரண தண்­டனை விதித்து நேற்று தீர்ப்­ப­ளித்­தது.

கொழும்பு மேல் நீதி­மன்றின் சிறப்பு ‘ட்ரயல் அட் பார்’ அமர்வில் ஷிரான் குண­ரத்ன தலை­மையில் பத்­மினி ரண­வக்க குண­தி­லக மற்றும் சீ.பீ.எஸ். மொராயஸ் ஆகிய நீதிப­திகள் உள்­ள­டங்­கிய குழுவே இந்த தீர்ப்பை நேற்று அறி­வித்­தது. வழக்கின் முதல் பிர­தி­வா­தி­யான பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் அனுர டி மெல், மூன்­றா­வது பிரதிவாதியான தெமட்­ட­கொட சமிந்த எனப்­படும் சமிந்த ரவி ஜயநாத், 07 ஆவது பிரதிவா­தி­யான சரத் பண்­டார, 10 ஆவது பிர­தி­வா­தி­யான காணாமல் போயுள்ள ஜனக கலகொட மற்றும் 11 ஆவது பிர­தி­வா­தி­யான துமிந்த சில்வா ஆகி­யோ­ருக்கே இவ்­வாறு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இவர்­களை ஜனா­தி­பதி நிர்­ணயம் செய்யும் திகதி மற்றும் நேரத்தில் வெலிக்­கடை சிறைச்­சா­லையின் நான்கு சுவர்­க­ளுக்குள் உயிர் பிரியும் வரை தூக்­கி­லிட்டு மரண தண்­டனை விதிக்­கு­மாறு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், அப்போதைய ஜனா­தி­ப­தியின் தொழிற்­சங்க ஆலோ­ச­க­ரு­மான பாரத ல­க்ஷமன் பிரே­ம­சந்­தி­ரவின் படுகொலை தொடர்­பி­லான வழக்கின் தீர்ப்பு நேற்று காலை 10.00 மணிக்கு அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. அதன்­படி கொழும்பு மேல் நீதி­மன்றின் பாது­காப்­பா­னது விஷேட அதி­ர­டிப்­படை மற்றும் மேல­திக பொலி­ஸாரின் துணை­யுடன் பலப்படுத்தப்பட்டிருந்தது.

அனுர டி மெல், சந்­தன ஜகத் குமார, சமிந்த ரவி ஜயநாத், லங்கா ரசாஞ்­ஜன, மாலக சமீர, விதா­ன­க­மகே அமில, சரத் பண்­டார, சுரங்க பிரேம லால், சமிந்த சமன் குமார, ஜனக கல­கொட, துமிந்த சில்வா, ரோஹன மார­சிங்க மற்றும் நாகொட ஆரச்­சிகே சமிந்த ஆகிய 13 பேர் இந்த வழக்கின் பிர­தி­வா­தி­க­ளாக சட்­டமா அதி­பரால் பெயரிடப்பட்டிருந்தனர்.

2011 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 8 ஆம் திகதி அங்­கொட ராஹுல வித்­தி­யா­ல­யத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த வாக்­க­ளிப்பு நிலை­யத்­துக்குள் அத்து மீறி அங்­கி­ருந்­த­வர்­களை அச்­சு­றுத்­தி­யமை, நிவங்கா மது­ஷானி பத்­தி­ரன என்­ப­வரை தூற்றி அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக சட்ட மா அதி­பரால் குற்றச் சாட்டு முன்வைக்கப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் 2011 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த தின­மொன்றில் அங்­கொடை ராஹுல வித்­தி­யா­லய வாக்­க­ளிப்பு நிலை­யத்தில் கடமையில் இருந்த தமித் சுரங்க குமா­ரவின் மார்பு பகு­தியில் கைத்­துப்பாக்கியொன்றை வைத்து அச்­சு­றுத்­தி­யமை அங்­கொட ஹிம்­புட்­டான ஒழுங்கையில் வைத்து சட்ட விரோத குழு­வொன்றின் அங்­கத்­த­வ­ராக இருந்து-  பாரத ல­க்ஷமன் பிரே­ம­சந்­திர, ஜலாப்தீன் மொஹம்மட் அசீம், மணிவேல் குமா­ர­சு­வாமி மற்றும் தமித் தர்­ஷன ஜய­தி­லக ஆகி­யோரை படு­கொலை செய்­தமை, ராஜ­து­ரகே காமினி என்­பவர் மீது துப்­பாக்கி பிர­யோகம் செய்து படு­காயம் ஏற்­ப­டுத்­தி­யமை, அந் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை மற்றும் சதித் திட்டம் தீட்­டி­யமை உள்­ளிட்ட 17 குற்றச் சாட்­டுக்­களின் கீழ் சட்ட மா அதி­பரால் மேற்­படி பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக குற்றச் சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

தண்­டனை சட்டக் கோவையின் 146 ஆவது அத்­தி­யா­யத்­துடன் இணைத்து கூறப்­படும் 146,486,296 ஆகிய அத்­தி­யா­யங்­களின் கீழும் தண்­டனை சட்டக் கோவையின் 32 ஆவது அத்­தி­யா­யத்­துடன் இணைத்து கூறப்­படும் 144,296 மற்றும் 486 ஆகிய அத்தியாயங்களின் கீழும் பிர­தி­வா­தி­களால் குற்றம் புரி­யப்­பட்­டுள்­ள­தாக இதன் போது சட்ட மா அதி­பரால் மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்­பி­லான சிறப்பு ட்ரயல் அட் பார் விசா­ர­ணைகள் கடந்த 2015 ஒக்­டோபர் 12 ஆம் திகதி முதல் ஆரம்­ப­மா­கின.

மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான ஷிரான் குண­ரத்ன(தலைவர்), பத்­மினி ரண­வக்க குணதி­லக மற்றும் சீ.பீ.எஸ்.மொராயஸ் ஆகிய மூவர் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் ஊடாக வழக்­கா­னது மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க விசாரணை அறை­யி­லேயே இடம்­பெற்­றது.

இந்­நி­லையில் நேற்று வியாழக்கிழமை காலை முதலாம் இலக்க விசா­ரணை அறைக்குள் காலை 9.20 மணி வரை எவரும் உள் நுழைய அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. அதன் பின்னர், குறித்த கொலை வழக்­குடன் தொடர்­பு­டை­ய­வர்கள், அவர்­க­ளது உறவினர்கள், சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மட்டும் மன்­றுக்குள் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

காலை 10.45 மணி­ய­ளவில் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இதன் போது திறந்த மன்றை அழைத்த தலைமை நீதி­பதி ஷிரான் குண­ரத்ன, நீதி­ப­திகள் மூவரும் தமது தீர்ப்பை தனித்­த­னி­யாக அறி­விப்பர் என கூறினார்.

இந் நிலையில் முத­லா­வ­தாக தனது தீர்ப்பை நீதி­பதி பத்­மினி ரண­வக அறி­வித்தார்.

வழக்கின் 10 ஆவது பிர­தி­வா­தி­யான ஜனக கல­கொட இல்­லாமல் குற்­ற­வியல் சட்டத்தின் 241 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக சாட்சி விசா­ர­ணைகள் இடம்பெற்று இந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்பட்­ட­தாக இதன் போது நீதி­பதி பத்­மினி ரண­வக சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­ய­டுத்து பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணி­களின் பெயர் பதி­வுகள் இடம்­பெற்றதுடன் அதன் பின்னர் தீர்ப்பை அறி­விக்கும் நட­வ­டிக்கை ஆரம்­ப­மா­னது.

நீதி­பதி பத்­மினி ரண­வக அறி­விக்­கையில்;

”இந்த வழக்கில் நீண்ட சாட்சி விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. அதில் சாட்­சி­யங்கள் பல ஒன்றுக்­கொன்று முரண்­பட்­ட­தாக இருப்­பதை நாம் அவ­தா­னித்தோம். எனினும் முன்­வைக்­கப்­பட்­டுள்ள சாட்­சி­யங்­களின் படி 11 ஆவது பிர­தி­வா­தியின் தலை­மை­யி­லேயே, 2011 ஒக்­டோபர் மாதம் 08 ஆம் திகதி இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மேற்­படி சம்­பவம் நடந்­துள்­ளமை உறு­தி­யா­கின்­றது. அவரின் தலை­மையில் வந்­தோரே இந்த சம்பவத்தை அரங்­கேற்­றி­யுள்­ளனர்.

பாரத ல­க்ஷமன் உள்­ளிட்ட நால்­வரின் மர­ணத்­துக்கு ரீ 56 ரக துப்­பாக்­கி­யினால் சுடப்பட்ட­மைதான் காரணம் என்­பதும் பல சாட்­சி­யங்கள் ஊடாக தெளி­வா­னது. இதற்காக பயன்­ப­டுத்­தப்­பட்ட துப்­பாக்­கியும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.
சம்­பவம் இடம்­பெறும் போது 11 ஆவது பிர­தி­வாதி மது போதையில் இருந்­த­மையும் சட்ட வைத்­திய அதி­காரி உள்­ளிட்­டோரின் சாட்­சி­யங்­களால் உறு­தி­யா­னது. அத்­துடன் தாக்கு­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட துப்­பாக்­கி­யா­னது விடு­தலை புலி­க­ளுக்கும் ராணுவத்­துக்கும் இடையில் இடம்­பெற்ற போரின் போது காணாமல் போன துப்­பாக்கி என்­பதும் தெரி­ய­வந்­தது.

11 ஆவது பிர­தி­வா­தியே குறித்த தினம் இடம்­பெற்ற மர­ணங்­க­ளுக்கும் சம்பவங்களுக்கும் முழுப் பொறுப்பு என்­பதை முறைப்­பாட்­டாளர் தரப்பு சந்தேகத்துக்கு இட­மின்றி நிரூ­பித்­துள்­ளது. எனவே 2,4,5,6,8,9,12,13 ஆம் பிர­தி­வா­தி­களை சுமத்­தப்­பட்­டுள்ள அனைத்து குற்றச் சாட்­டுக்­களில் இருந்தும் நான் விடு­விக்­கின்றேன்.” என அறி­வித்­ததை அடுத்து விடு­விக்­கப்­பட்ட பிர­தி­வா­திகள் நீதி­மன்­றுக்கு வெளியே அனுப்­பட்­டனர்.

இத­னை­ய­டுத்து தொடர்ந்தும் நீதி­பதி பத்­மினி ரண­வக தனது தீர்ப்பை வாசித்தார்.
“முத­லா­வது பிர­தி­வாதி ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர். எனினும் 12,13 ஆவது பிர­தி­வா­தி­களைப் போன்று செயற்­ப­டாது அவர் 11 ஆவது பிர­தி­வா­தியின் அதிகாரத்தை தன்பக்கம் எடுத்து அதன் பால் செயற்­பட்­டுள்ளார். இதனால் அவ­ருக்கு எதி­ராக முறைப்­பாட்­டா­ள­ரினால் முன்­வைக்­கப்­பட்ட 1,5,6,7,8,9 மற்றும் 17 ஆகிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் அவரை நான் குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­கின்றேன்.

மூன்­றா­வது பிர­தி­வா­திக்கு எதி­ரான குற்றச் சாட்­டுக்­களும் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­ப­ண­மா­கின்­றன. அதன்­படி அவ­ரையும் 1,2,3,4,5,6,7,8,9,17 அகிய குற்றச் சாட்­டுக்கள் தொடர்பில் நான் அவரை குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­கின்ரேன்.

07 ஆவது பிர­தி­வாதி மீதும் சுமத்­தப்­பட்­டுள்ள 1,2,3,4,5,6,7,8,9,17 ஆகிய குற்றச்சாட்டுக்களும் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளதால் அவ­ரையும் இந்த மன்று குற்­ற­வா­ளி­யாக காண்­கி­றது. 10 ஆவது பிர­தி­வா­திக்கு எதி­ரான 1,2,3,4,5,6,7,8,9,17 ஆகிய குற்றச் சாட்­டுக்கள் தொடர்­பிலும் அவரை குற்­ற­வா­ளி­யாக கருதுகிறேன். 11 ஆவது பிர­தி­வா­தியே இந்த அனைத்து நட­வ­டிக்­கைக்கும் தலைமை தாங்­கி­யவர் என்ற ரீதியில் 1,2,3,4,5,6,7,8,9,17 ஆகிய குற்றச் சாட்­டுக்கள் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி அவ­ருக்கு எதி­ராக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளன. எனவே அவ­ரையும் குற்றவாளியாக நான் கரு­து­கின்றேன்.

11 ஆவது பிர­தி­வாதி மீதே முதலில் துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டுள்­ள­தாக அவ­ரது சட்டத்­த­ரணி தமது வாதத்தில் முன்­வைத்­தி­ருந்தார். அதன்­ப­டியே அவ­ரது பாது­காப்பு பொலிஸார் பதில் தாக்­குதல் நடத்­தி­ய­தாக அவர்கள் வாதிட்­டனர். எனினும் கொலை செய்­யப்­பட்ட பாரத ல­க்ஷ­ம­னி­டமும் பொலிஸ் பாது­கா­ப்பு இருந்­துள்­ளது. இதனை மிக நன்­றாக அறிந்­தி­ருந்த நிலையில் பரஸ்­பர துப்­பாக்கிச் சூடு நடக்க வாய்ப்பு உள்­ளதை அறிந்தும் 11 ஆவது பிர­தி­வாதி அதனை கணக்கில் எடுக்­காது பொறுப்­பற்று செயற்பட்டுள்ளார். அவை சாட்­சி­யங்கள் ஊடாக உறு­தி­யா­கின்­றன” என துமிந்த சில்வா உள்­ளிட்ட ஐவரை குற்­ற­வா­ளி­யாக அறி­வித்து தனது தீர்ப்பை அறி­வித்தார்.

நீதி­பதி பத்­மினி ரண­வக்­கவின் தீர்ப்­புடன் தானும் உடன் படு­வ­தாக ட்ரயல் அட் பார் நீதி­மன்ற குழாமின் மற்­றொரு நீதி­ப­தி­யான சீ.பீ.எஸ். மொறா­யஸும் அறி­வித்தார்.

இந் நிலை­யி­லேயே தலைமை நீதி­பதி ஷிரான் குண­ரத்ன தனது தீர்ப்பை வெளியிட்டார். அவர் அதில்;

“தண்­டனை சட்டக் கோவையின் அத்­தி­யா­யங்­க­ளுக்கு அமைய பிர­தி­வ­தி­களால் குற்றம் புரி­யப்­பட்­டுள்­ளமை தொடர்பில் முறைப்­பாட்­டா­ளர்கள் சந்­தே­கத்­துக்கு இடமின்றி நிரூ­பித்­துள்­ள­தாக கொள்ள முடி­யா­துள்­ளது.

இந்த வழக்கை பொறுத்­த­வரை சுயா­தீ­ன­மான சாட்­சி­களை முன வைக்க முறைப்­பாட்­டாளர் தரப்பு தவ­றி­யுள்­ளது.

முறைப்­பட்­டாளர் தரப்பு நீண்ட இடை வெளியின் பின்­ன­ரேயே சாட்­சி­யங்­களை மன்றில் பாரப்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­துடன் கண் கண்ட சாட்­சி­க­ளுக்கு மரண அச்சுறுத்தல் இருப்­ப­தாக கூறப்­பட்­டாலும் எந்த திக­தியில் எங்கு வைத்து எப்­போது யாரால் என்­பது குறித்து அவர்கள் கூற­வில்லை. இதனால் அது குறித்தும் நான் அவதானம் செலுத்­து­கின்றேன்.

உண்­மை­யி­லேயே சந்­தேக நபர்கள் தெரிந்­து­கொண்டே சட்ட விரோத குழு­வொன்றின் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­னரா எனும் சந்­தேகம் தொடர்பில் அவ­தானம் செலுத்தப்படுகின்­றது. இதன்போது அவர்கள் பொது­வான நோக்­கத்­துடன் ஒன்று சேர்ந்­துள்­ளமை தெளி­வா­கின்­றது.

சாட்­சி­க­ளுக்கு இடையே பரஸ்­பர வேறு­பாட்டை அவ­தா­னிக்க முடி­கின்­றது. குறிப்­பாக 03 ஆவது பிர­தி­வா­தியின் கைது தொடர்பில் பாரிய சந்­தேகம் நில­வு­கின்­றது. முறைப்பாட்­டாளர் தரப்பு, குற்றச்சாட்­டுக்­களை சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூபிக்க தவறியுள்ளது. சாட்­சிகள் மீதான சந்­தே­கங்­களை பிர­தி­வா­தி­க­ளுக்கு சாத­க­மாக வழங்கி அனைத்து பிர­தி­வா­தி­க­ளையும் அனைத்து குற்றச் சாட்­டுக்­களில் இருந்தும் நான் விடு­விக்­கின்றேன்”  என அறி­வித்தார்.

எனினும் இரு நீதி­ப­திகள் 05 பேரை குற்­ற­வா­ளி­யாக கண்­டதை அடுத்து அவர்­க­ளுக்கு எதி­ரான தண்­டனை அறி­விக்­கப்­பட்­டது.

தண்­டனை அறி­விக்­கப்­பட முன்னர், குறித்த பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணிகள் தமதுசேவை பெறு­ந­ருக்கு இலகு தண்­டனை வழங்­கு­மாறு தனித்­த­னி­யாக கருத்­தினை முன்­வைத்­தனர்.

இந் நிலையில் 2: 1 என்ற பெரும்­பா­ன­மையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு குற்றவாளியாக காணப்­பட்ட 05 பிர­தி­வா­தி­க­ளுக்கும் எதி­ராக தண்­டனை விபரம் அறிவிக்­கப்­பட்­டது. அவர்­க­ளுக்கு எதி­ரான முத­வாது குற்றச் சாட்டு தொடர்பில் தலா 06 மாத கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் 10 ஆயிரம் ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­ட­துடன், அப­ரா­தத்தைச் செலுத்­தாத விடத்து மேலும் மூன்று மாத­கால இலகு சிறைத் தண்டனை அனு­ப­விக்க வேண்டி வரும் என எச்­ச­ரிக்­கப்­பட்­டது.

02 ஆவது குற்றச் சாட்டு தொடர்பில் தலா 02 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் 10 ஆயிரம் ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­ட­துடன், அப­ரா­தத்தைச் செலுத்­தாது விடத்து மேலும் மூன்று மாத­கால இலகு சிறைத் தண்­டனை அனு­ப­விக்க வேண்டி வரும் என எச்­ச­ரிக்­கப்­பட்­டது.

03 ஆவது குற்றச் சாட்டு தொடர்பில் தலா 02 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் 10 ஆயிரம் ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­ட­துடன் அப­ரா­தத்தைச் செலுத்­தாது விடத்து மேலும் மூன்று மாத­கால இலகு சிறைத் தண்­டனை அனு­ப­விக்க வேண்டி வரும் என எச்­ச­ரிக்­கப்­பட்­டது.

04 ஆவது குற்றச் சாட்டு தொடர்பில் தலா 02 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் 10 ஆயிரம் ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­ட­துடன், அப­ரா­தத்தைச் செலுத்­தாது விடத்து மேலும் மூன்று மாத­கால இலகு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டது.

09 ஆவது குற்றச் சாட்டு தொடர்பில் தலா 20 வருட சிறைத் தண்டனையும் 17 ஆவது குற்றச் சாட்டு தொடர்பில் தலா ஆயுள் தண்டனையும் விதித்து ட்ரயல் அட்பார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந் நிலையில் 5,6,7,8 ஆம் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட முன்னர் குற்றவாளிகளான அனுர டி மெல், தெமட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ரவி ஜயநாத், சரத் பண்டார, துமிந்த சில்வா ஆகியோரிடம் இறுதியாக மன்றுக்கு ஏதாவது கூறவிரும்புகின்றீர்களா என கேட்கப்பட்டது.

இதற்கு தனித்தனியாக பதிலளித்த நால்வரும், தாம் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் நிரபராதிகள் எனவும் சம்பந்தமே இல்லாமல் தாம் குற்றவாறிகளாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இதனையடுத்து நீதிபதி பத்மினி ரணவக்க மரண தண்டனை தீர்ப்பினை வாசித்தார். இதன் போது நீதிமன்றில் அனைவரும் எழுந்து நின்றதுடன் அனைத்து மின் குமிழ்களும் அணைக்கப்பட்டன.

“இலங்கை சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதி நிர்ணயம் செய்யும் திகதியில் மற்றும் நேரத்தில், வெலிக்கடை சிறைச் சாலையின் நான்கு சுவர்களுக்குள் வைத்து குற்றவாளிகளான அனுர டி மெல், சமிந்த ரவி ஜயநாத், சரத் பண்டார, ஜனக கலகொட, துமிந்த சில்வா ஆகியோரை உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு கொல்லவும்” என தீர்ப்பறிவித்து தீர்ப்பெழுதிய பேனையை உடைத்தெறிந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்