எழுத்தறிவு தினத்தையொட்டி, பாலமுனையில் விழிப்புணர்வு நிகழ்வுகள்

🕔 September 8, 2016
literacy-day-033
– பி. முஹாஜிரீன் –

ர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள், பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். காஸிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

‘பிள்ளைகள் தினமும் பாடசாலை செல்வதை உறுதிப்படுத்துவோம்’, ‘எமது எதிர்காலத்தின் முதலீடு கல்வியாகும்’, ‘எமது சமூகத்தின் எழுச்சியை கல்வியினூடாக முன்னெடுப்போம்’, ‘அன்புள்ள பெற்றோர்களே எமது கல்வியில் எப்போதும் கருத்தாயிருங்கள்’, ‘கல்வியே எமது சுபீட்சமான வாழ்விற்கு வழியமைக்கும்’, ‘கல்வியில் இடைவிலகியோரை மீண்டும் பாடசாலையில் இணைப்போம்’, ‘கல்விக்கான தடைகளைத் துடைத்தெறிவோம்’, ‘எமது எதிர்காலம் கல்வியே’ போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகள  ஏந்தியவாறு விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவர்ஈகள் ஈடுபட்டதோடு, வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

இதேவேளை, பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து, அவர்களை பாடசாலையில் இணைக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி. பஸ்மில், முறைசாரா உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். லாபீர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ. அன்சார் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.literacy-day-011 literacy-day-022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்