கடற்படை முன்னாள் பேச்சாளரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

🕔 September 6, 2016

Natnayake - 011லங்கைக் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. ரத்னாயக, நாட்டை விட்டு வெளியேறுவதற்காக முன்வைத்த கோரிக்கையினை கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ன இன்று செவ்வாய்கிழமை நிராகரித்துள்ளார்.

வெளிநாட்டில் சுமார் 18 மாதங்கள் தங்கியிருந்து கற்கையொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனுமதியினை, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. ரத்னாயக நீதிமன்றிடம் கோரியிருந்தார்.

கடற்படையின் முன்னாள் பேச்சாளரின் கடவுச் சீட்டு, நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடற்படையைச் சேர்ந்த குழுவொன்று மேற்கொண்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில், கடற்படையின் முன்னாள் பேச்சாளரின் கடவுச் சீட்டு முடக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வழக்கில் சந்தேக நபர்களின் பட்டியலில், கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. ரத்னாயகவின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும், குறித்த வழக்கில் சந்தேக நபர்களின் பட்டியலில், கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. ரத்னாயகவின் பெயர் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகக் கூறிய நீதிமன்றம், நீண்ட காலம் அவர் வெளிநாட்டில் தங்கியிருப்பது, வழங்கு விசாரணைகளுக்குத் தடையாக அமையும் என்றும் தெரிவித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்