மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் , இலங்கைக்கான மலேசியத் தூதுவர் மீது தாக்குதல்

🕔 September 4, 2016

Ansar - 011லங்கைக்கான மலேசியத் தூதுவர் இப்றாகிம் அன்சார் மீது, மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டுள்ளார்.

விமான நிலைத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த, எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்களாலேயே இவர் தாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

மலேசியாவுக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை, நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக, விமான நிலையம் வந்தபோதே, தூதுவர் அன்சார் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தூதரகத்தின் இரண்டாம் நிலைச் செயலாளர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ கூறுகையில்; மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்களாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளான தூதுவரும், செயலாளரும் கோலாலம்பூரிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments