செப்டம்பர் 03: ஜனாதிபதி மைத்திரிக்கு, 65ஆவது பிறந்த தினம்

🕔 September 3, 2016

Mithiripa sirisena - 096னாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று சனிக்கிழமை 65 வயது நிறைவடைகிறது.

பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன என்பது, இவரின் முழுப் பெயராகும். 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி பொலனறுவையில் விவசாயக் குடும்பமொன்றில் இவர் பிறந்தார்.

பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி பயின்ற இவர், பின்னர் குண்டசாலை விவசாயக் கல்லூரியில் பயின்று 1973 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தார்.

1979 ஆம் ஆண்டில் சுதந்திரக் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் மாவட்ட செயலாளராகப் பணியாற்றினார். பின்னர் அக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989 ஆம் ஆண்டு நேரடி அரசியலில் நுழைந்த மைத்திரி, சுதந்திரக் கட்சியினூடாக நாடாளுமன்ற உறுப்பினரானார். அதனைத் தொடர்ந்து  1994 முதல் 2014 நவம்பர் வரை அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

பாதுகாப்புப் பதில் அமைச்சராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

பிலியந்தலை, பொரலஸ்கமுவ என்ற இடத்தில் 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதியன்று, மைத்திரி சென்ற வாகன அணித் தொடர் மீது விடுதலைப் புலிகளால் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரியின் பிறந்த தினத்தையொட்டி, இன்றைய தினம் பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்