சு.கா. மாநாட்டில் கலந்து கொள்வதில்லை; மஹிந்த தரப்பு தீர்மானம்

🕔 September 3, 2016

Mahinda Rajapaksa - 054ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் அந்தக் கட்சியின் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேற்படி மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளை ஞாயிற்றுக்கிழமை  குருணாகலில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில், கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளப் போவதில்லையென மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இதேபோன்று, மஹிந்த ஆதரவு அணி சார்ந்த மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் கலந்து கொள்வதில்லையென, ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும், நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்